கோவில்பட்டி அருகே மருத்துவர், செவிலியர்களுக்கு முழுக் கவச உடை தயாரிப்பு பணி தீவிரம்

கோவில்பட்டி அருகே மருத்துவர், செவிலியர்களுக்கு முழுக் கவச உடை தயாரிப்பு பணி தீவிரம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதித்தவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர் களுக்கான முழுக் கவச உடை தயாரிப்புப் பணி, கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 கவச உடைகள் தயாரிக்கப்பட்டு கேரளா, ஆந்திரா மாநில அரசுகளின் ஆர்டரின்பேரில் அந்த மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன.

இதுகுறித்து நிறுவன உரிமை யாளர் தி.சுந்தர் கூறுகையில், முழுக் கவச உடைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 90 ஜி.எஸ்.எம். ஸ்பன் துணியில் தயாரிக்கிறோம். இந்த வகை துணி தண்ணீரை உறிஞ்சாது. மும்பை, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகளை மொத்தமாகக் கொள்முதல் செய் கிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in