

கள்ளக்குறிச்சி ஒன்றியம் சங்க ராபுரம் அடுத்த செம்படாக்குறிச்சி கிராமத்தில் மூப்பனார் கோவில் அருகே கடந்த 2012-ம் ஆண்டு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுகாதார வளாகத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அதனருகே பயன் பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறு ஒன்று இருந்துள்ளது. அந்த ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் ஊரக வளர்ச்சித் துறையினர் அப்படியே விட்டுவிட்டனர்.
இதுதொடர்பாக, அப்பகு தியைச் சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் கிராம ஊராட்சி செய லருக்கு புகார் தெரிவித்தும் இதுவரை அந்த ஆழ்துளைக் கிணறு மூடப்படவில்லை.
இதுதொடர்பாக, கள்ளக் குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாளிடம் கேட்டபோது, இது குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.