

கரோனா தொற்று பரவிவரும் நிலையில், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய தாக சித்த மருத்துவர்களால் பரிந் துரைக்கப்பட்ட கபசுரக் குடிநீரை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் அதன் தேவை அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் தன்னார்வ அமைப்பினர், சித்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். அதேநேரத்தில், இந்த சூரணப் பொடிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாட்டு மருந்துக் கடைக்காரர்கள் கூறியது: கபசுரக் குடிநீர் சூரணத்துக்கு தட்டுப்பாடு உள்ளதால் சூரணப் பொடி தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை வெளியூர்களில் இருந்து கொண்டு வர முடிய வில்லை.
நாட்டு மருந்துக் கடைகளைத் திறக்கவும், மூலப் பொருட்களை கொண்டு வரவும் அரசு அனுமதிக்க வேண்டும்.
சூரணப் பொடியை தயாரித்து அருந்துவது தொடர்பாக, திருநெல் வேலியில் உள்ள பாளை சித்த மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முத்துக்குமார் கூறிய தாவது:
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக கபசுரக் குடிநீர் பருகலாம். ஒரு நபரின் தேவைக்கு 5 கிராம் கபசுர சூரணப் பொடியை 200 மில்லி தண்ணீரில் கலந்து 50 மில்லி குடிநீர் கிடைக்கும் வரை சுண்டக் காய்ச்சி அருந்த வேண்டும்.
ஆரோக்கியத்துடன் உள்ள வர்கள் வெறும் வயிற்றிலும், சற்று உடல் பலவீனமானவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகும் அருந் தலாம்.
15 வயதுக்குட்பட்டோர் ஒரு நாளைக்கு 20 மில்லி, 15 வயதுக்கு மேற்பட்டோர் 30 முதல் 50 மில்லி வரை அருந்தலாம்.
கபசுரக் குடிநீர் கரோனா நோய்க்கான மருந்தல்ல. உடலில் உள்ள செல்களின் எதிர்ப்பு சக்தியை கூட்டச் செய்யும் என்றார்.