

திருச்சியில் தனியார் சித்த மருத்துவமனையில் அனுமதி யின்றி விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கபசுர குடிநீர் சூரண பாக்கெட்டுகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
கே.கே. நகர் இந்திரா நகரில் உள்ள தனியார் சித்த மருத்துவ மனை ஒன்றில் கபசுர குடிநீர் சூரண பாக்கெட்டுகள், உரிய அனுமதியின்றி விற்பனை செய் யப்படுவதாக மாவட்ட சித்த மருத் துவ அலுவலர் எஸ்.காமராஜூக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கே.கே.நகர் இந்திரா நகர் பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவமனையில் நேற்று அவர் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது, உரிய அனுமதி யின்றி கபசுர குடிநீர் சூரண பாக் கெட்டுகளை அங்கு விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 10 கிலோ கபசுர குடிநீர் சூரண பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், விளக்கம் கேட்டு அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கூறும்போது, “அரசின் அனு மதியின்றி விற்பனை செய் யப்படும் கபசுர குடிநீர் சூரண பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பொது மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மருந்துகளை வாங்கும் போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு அனுமதி எண் உள்ளதா என்பதை சரிபார்த்து வாங்குவதுடன், ரசீது கேட்டுப் பெறுவது அவசியம்” என்றார்.