Published : 09 Apr 2020 07:47 AM
Last Updated : 09 Apr 2020 07:47 AM

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை; ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தகவல்- மாநில முதல்வர்களின் கருத்தை கேட்ட பிறகு இறுதி முடிவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக் கைகள் தொடர்பாக நாடாளுமன் றத்தின் அனைத்துக் கட்சித் தலை வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வரும் 14-ம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் ஊர டங்கை விலக்கிக் கொள்வது சாத்தியமில்லை என்று பிரதமர் கூறினார். இதன் மூலம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகையே மிரட்டி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 149 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பரவு வதைத் தடுக்க நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நட வடிக்கை குறித்து முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசுத்தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி உள்ளிட்டஅரசியல் கட்சித் தலைவர்களுடன் மோடி ஏற்கெனவே ஆலோசனை நடத்தினார். மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அரசியல்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசித்தார்.

இதில் குலாம் நபி ஆசாத் (காங் கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), சஞ்சய் ரவுத் (சிவசேனா), நவநீத கிருஷ்ணன் (அதிமுக), டி.ஆர்.பாலு (திமுக) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கவும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சி களின் தலைவர்கள் தங்கள் யோசனைகளைத் தெரிவித்தனர். அவற்றை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனை யின்போது பிரதமர் மோடி பேசி யது குறித்து தகவல்கள் வெளியாகி யுள்ளன. மோடி பேசியதாவது:

கரோனா வைரஸைக் கட்டுப் படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசோடு மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு ஒத் துழைப்பு அளித்து வருவது பாராட் டத்தக்கது. கரோனா வைரஸின் போக்கு மனித குல வரலாற்றில் தற் போதைய காலகட்டத்தையே மாற் றும் வகையில் உள்ளது. கரோனா வைரஸுக்கு முன், வைரஸுக்குப் பின் என்ற நிலை ஏற்படும்.

கரோனா வைரஸுக்குப் பிறகு வாழ்க்கை ஏற்கெனவே இருந்த தைப் போன்று இருக்காது. மக்களிடம் தனிப்பட்ட முறையிலும், அவர்களின் நடவடிக்கையிலும், சமூக அளவிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே இப் போது அரசின் முன்னுரிமையாக உள்ளது. தற்போது நாட்டில் சமூக அவசர நிலை போன்ற நெருக் கடியான சூழல் நிலவுகிறது. கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி யது அவசியமாகியுள்ளது. நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

மாநில முதல்வர்களுடன் ஏற் கெனவே ஆலோசித்தேன். பல் வேறு மாநிலங்களும் நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். 14-ம் தேதிக் குப் பிறகு ஊரடங்கை விலக்கிக் கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில முதல்வர்களுடன் மீண்டும் கலந்தாலோசிப்பேன்.

இவ்வாறு மோடி பேசினார்.

வரும் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை விலக்கிக் கொள்வது சாத்தியமில்லை என்று பிரதமர் கூறியிருப்பதன் மூலம் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, வரும் 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் மோடி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களின் கருத்துகளை மோடி கேட்பார் என்றுதெரிகிறது. அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏழைக் குடும்பத்துக்கு உதவுங்கள்.. பிரதமர் வேண்டுகோள்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிரமாக பணியாற்றி வரும் பிரதமர் மோடியைப் பாராட்டும் வகையில், வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு பொதுமக்கள் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்ட வேண்டும்’ என்று சமூக வலைத்தளங்களில் நேற்று வதந்தி பரவியது. இது பிரதமர் மோடியின் கவனத்துக்குச் சென்றது. இந்த செய்தியை மோடி மறுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
என்னை கவுரவிக்க 5 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டுங்கள் என்று சிலர் பிரச்சாரம் செய்வதாக எனது கவனத்துக்கு வந்தது. இது என்னை சர்ச்சையில் இழுத்து விடுவதுபோல உள்ளது. ஒருவேளை இது யாரோ ஒருவரின் நல்லெண்ணமாகக் கூட இருக்கலாம். ஆனால், உண்மையிலேயே என் மீது உங்களுக்கு அன்பு இருந்தால், என்னை கவுரவிக்க வேண்டும் என்று விரும்பினால், கரோனா வைரஸ் பிரச்சினை தீரும் வரை ஏழைக் குடும்பத்துக்கு உதவுங்கள். அதுதான் எனக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். ஏழைக் குடும்பத்துக்கு உதவுவதை விட எனக்கு பெரிய மரியாதை வேறு இருக்க முடியாது.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x