பிரதமர் மோடிக்கு கமல் கடிதம்: எஸ்.வி.சேகர் கிண்டல்

பிரதமர் மோடிக்கு கமல் கடிதம்: எஸ்.வி.சேகர் கிண்டல்
Updated on
1 min read

பிரதமர் மோடிக்கு கமல் கடிதம் எழுதியிருப்பதை எஸ்.வி.சேகர் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனிடையே கரோனா ஊரடங்கு குறித்து பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் காட்டமாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் மிக நீளமானது. அதில் பண மதிப்பிழப்பு எப்படித் திட்டமிடப்படாமல் நடத்தப்பட்டதோ, அதேபோல் ஊரடங்கும் சரியாகத் திட்டமிடப்படவில்லை. அடித்தட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை போன்ற பல விஷயங்களைச் சுட்டிக்காட்டிய அந்தக் கடிதத்தை கமல் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார்.

இந்தக் கடிதம் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதன்முறையாக ஒருவர் மிகத் தெளிவாகத் தனது தரப்பு கருத்துகளை எடுத்துரைத்துள்ளார் எனப் பலரும் தெரிவித்தனர்.

கமல் வெளியிட்ட தமிழ்க் கடிதத்தின் ட்வீட்டைக் குறிப்பிட்டு பாஜக கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில், "இவ்வளவு பெரிய லெட்டரை மோடி படிக்கிறதுக்குள்ள கரோனாவே உலகத்தை விட்டு போயிடும்" என்று தெரிவித்துள்ளார்.

- S.VE.SHEKHER

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in