Last Updated : 08 Apr, 2020 06:58 PM

 

Published : 08 Apr 2020 06:58 PM
Last Updated : 08 Apr 2020 06:58 PM

மதுரையில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவிய காங்கிரஸ் கட்சியினர்

மதுரை

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஏப்.,14ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அன்றாடம் உழைத்து வாழ்க்கையை நகர்த்தும் ஏழை, எளியோருக்கு தமிழக அரசினர் சார்பில் ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கினாலும், காய்கறி போன்ற பிற பொருட்கள் வாங்குவதற்கு சிலர் சிரம்மப்படும் சூழலும் உருவாகலாம்.

இதை கருத்தில் கொண்டு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்களுக்கு காய்கறி, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அத்துடன் கரோனாவைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் போன்ற தடுப்புச் சாதனங்களை வழங்க நகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் திட்டமிட்டார்.

இதனைத் தொடர் ந்து நேற்று அவரது தலைமையில் கட்சி அலுவலகத்தில் வைத்து, கேகே. நகர் பகுதியிலுள்ள கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கையதுபாபு, காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x