Published : 08 Apr 2020 06:31 PM
Last Updated : 08 Apr 2020 06:31 PM

கரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.56 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மதுரை மக்களவை உறுப்பினர் தமது உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிந்து ரூ.56.17 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை இன்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மருத்துவமனை முதன்மையர் சங்குமணி ஆகியோரிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 56 லட்சம் ரூபாய் மதிப்பில் கொரோனா சிறப்பு வார்டுக்கான உபகாரணங்கள் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வது ஏற்புடையதல்ல.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை வாரத்துக்கான உபகரணம் வழங்குவதாக அறிவித்து அதற்கான கடிதத்தை மத்திய அரசுக்கு மார்ச் 25-ஆம் தேதி அனுப்பியிருந்தேன். அதற்கான உபகரணங்களை வந்து சேர்ந்துள்ன.

இரண்டு ஆண்டுகளுக்கு தொகுதிக்கான நிதியினை நிறுத்தி வைத்தால் அரசு மருத்துவமனைக்கு இதுபோன்ற வசதிகளை உடனடியாகச் செய்ய முடியாது.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தேவையான என்- 95 மாஸ்க், போதுமான அளவுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் வழங்கி வருகின்றது "பிபிஇ கிட்" வாரம் ஆயிரம் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் ஏற்பாடு செய்து கொடுப்பேன். அவர்களுக்கு என்ன தேவையோ அதை தெரிவிக்கலாம்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மருத்துவ ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு மாத சிறப்பு ஊதியம் முன்னதாக வழங்க வேண்டுமென்றார்.

மேலும், அமெரிக்காவிற்கு மருந்துகள் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக்கொண்ட இரண்டு மணி நேரத்தில் மத்திய அரசு மருந்துகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உலகில் எந்த நாட்டுக்கும் நாம் பகைமை கிடையாது அமெரிக்காவை விட நான்கு மடங்கு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு இந்தியா இங்குள்ள மக்களுக்கு மருந்துத் தேவைகள் என்ன என்பதை மத்திய அரசு தெரிந்துகொண்டு அதற்குப் பின் நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். ஒருவர் தன்னுடைய தேவையை மிரட்டிக் கேட்கிறார் அதற்கு சம்மதிப்பது அடிமைக்குச் சமமானது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x