Last Updated : 08 Apr, 2020 06:10 PM

 

Published : 08 Apr 2020 06:10 PM
Last Updated : 08 Apr 2020 06:10 PM

எம்.பி.க்களின் சம்பளம் பிடித்தம்: கார்த்தி சிதம்பரம் வரவேற்பு

காரைக்குடி

எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை மத்திய அரசு பிடித்தம் செய்வதற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தினசரி சந்தை நடக்கிறது. இன்று சந்தைக்கு வந்த மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர், கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டன.

மேலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தினக்கூலியாக இருப்பவர்களுக்கு ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது வங்கிக் கணக்கில் மத்திய, மாநில அரசுகள் கூடுதலாக நிவாரணத் தொகை செலுத்த வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நிவாரணத்தொகையை வழங்கிவிட்டு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்.

எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்வதை வரவேற்கின்றேன். அதேசமயத்தில் அரசும் நிர்வாகச் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தினால் தொகுதியின் வளர்ச்சி தடைபடும். இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x