தமிழக பாரம்பரிய தொழில் கண்காட்சி: வர்த்தக மையத்தில் தொடங்கியது

தமிழக பாரம்பரிய தொழில் கண்காட்சி: வர்த்தக மையத்தில் தொடங்கியது
Updated on
1 min read

தமிழக பாரம்பரிய தொழில் குறித்த மூன்று நாள் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 9,10 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இதற்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) செயல்பட்டு வருகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, பிக்கி சார்பில் ‘தமிழ்நாடு பாரம்பரிய தொழில் கண்காட்சி’ நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். மேலும், பிக்கியின் பாரம்பரிய தொழில் விருதுகளையும் வழங்கினார்.

வாழைநார் கைவினை பொருட்கள் பிரிவில், சி.சேகர், நெசவு பிரிவில் வள்ளி, கைவினை பொருட்கள் பிரிவில் லதா, மட்பாண்டம் பிரிவில் ராமுவேலர், பட்டு நெசவு பிரிவில் கேசவன் ஆகியோரும் விருது பெற்றனர்.

நிகழ்ச்சியில், பிக்கி தலைவர் ரூபன் ஹாபே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in