

நடிகர் அஜித்தைப் போல மற்ற நடிகர்களும் கரோனா நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும் என, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அழைப்பு விடுத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்புப் பாதையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு இன்று காலை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அருகேயுள்ள அம்மா உணவகத்தில் மதிய உணவுடன் இலவசமாக முட்டை வழங்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நேரத்திலும் விவசாயிகள் நஷ்டம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.3.86 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 17 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியல் தயாரித்து அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னணி நடிகர் அஜித் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.25 கோடி வழங்கியுள்ளார். அவருக்கு எங்கள் துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அஜித்தை பின்பற்றி திரைத்துறையைச் சேர்ந்த மற்றவர்களும் தாங்களாக முன்வந்து கரோனா நிவாரண நிதி அளிக்க வேண்டும். இதேபோல் பொதுமக்களுக்கும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன்