பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்!- ஊடகத் துறையினருக்கு மகேஷ் பொய்யாமொழி அட்வைஸ்

பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்!- ஊடகத் துறையினருக்கு மகேஷ் பொய்யாமொழி அட்வைஸ்
Updated on
1 min read

கரோனா பீதி திக்கெட்டும் திகிலைக் கிளப்பிவரும் நிலையில், திருச்சி திருவெறும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 30 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செய்தி மற்றும் ஊடகத்துறையினர் இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர். டெல்லியில் பணியில் இருந்த தஞ்சையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பத்திரிகையாளர்களிடம் அக்கறை கொண்ட பலரும் தங்களுக்கு தெரிந்த பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ-வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை முதல் ஒவ்வொருவராக செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார். “உங்கள் பணிகள் மிகவும் அத்தியவாசியமானவைதான். அதேநேரத்தில் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். கிருமிநாசினி, முகக் கவசம், கை உ றைகள் ஆகியவை தயாராக இருக்கின்றன. அவைகளோ அல்லது வேறு எந்த உதவி தேவைப்பட்டாலும், எந்த நேரத்திலும் என்னை அணுகலாம்” எனவும் அவர் கூறி வருகிறார்.

ஏற்கெனவே, செய்தியாளர்களுக்கு தலா 3000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளரான உதயநிதிக்கு நெருங்கிய நண்பருமான மகேஷ் பொய்யாமொழியும் பத்திரிகையாளர்கள் மீது அக்கறை காட்டுவது தமிழக செய்தியாளர்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in