தமிழகத்தில் 14 உதவி ஆணையர்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் 14 உதவி ஆணையர்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு
Updated on
1 min read

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 14 உதவி ஆணையர்கள், டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட உதவி ஆணையர்கள், டிஎஸ்பிக்கள் பதவியும் தற்போது மாற்றப்பட்ட பதவியும்:

1. சென்னை,மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அசோகன், எழும்பூர் சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

2. செக்யூரிட்டி சென்னை உதவி ஆணையர் ஹரிகுமார், எம்கேபி நகர் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. எம்கேபி நகர் உதவி ஆணையர் முத்துக்குமார், புழல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

4. திருப்பூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி தனராசு, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

5. சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ஜீவானந்தம், பரங்கிமலை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

6. பரங்கிமலை உதவி ஆணையர் சங்கரநாராயணன், சென்னை, மாநில குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

7. பூக்கடை உதவி ஆணையர் லட்சுமணன், சென்னை காவல் ஆணையர் அலுவலக நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பி பாலகிருஷ்ண பிரபு, பூக்கடை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. தமிழ்நாடு கமாண்டோ பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

10. விழுப்புரம், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி விஜயராமன், தமிழ்நாடு கமாண்டோ படை, சென்னை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

11. கோயம்புத்தூர் சரக பயிற்சி மைய டிஎஸ்பி நாகராஜன், சேலம் நகர மேற்கு சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

12. சேலம் மேற்கு சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் செல்வராஜ், சேலம் நுண்ணறிவுப் பிரிவு (சிசிஐடபில்யூ) டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

13. சீருடைப் பணியாளர் தேர்வாணைய சென்னை டிஎஸ்பி ஜரீனா பேகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, சென்னை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

14. சிபிசிஐடி, சென்னை டிஎஸ்பி சிவனுபாண்டியன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய சென்னை, டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கண்ட உத்தரவை டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in