கரோனா தடுப்பு: தொண்டர்களிடம் நிதி திரட்டிய தேமுதிக; ரூ.5.10 லட்சம் விழுப்புரம் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் ரூ.3.10 லட்சத்திற்கான வரைவோலையை தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் வழங்குகிறார்.
விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் ரூ.3.10 லட்சத்திற்கான வரைவோலையை தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் வழங்குகிறார்.
Updated on
1 min read

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேமுதிக சார்பில் ரூ.5.10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் நிதி அளிக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக, திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்த மாவட்ட ஆட்சியரிடம் நிதி அளித்து வருகிறது.

ஆனால், தமிழகத்தில் முதன்முறையாக தன் தொண்டர்களிடம் நிதி பெற்று, பெறப்பட்ட நிதியினை அரசுக்கு அளிக்க தேமுதிக தலைமை உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நிதி பெறப்பட்டது. விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளரான முன்னாள் எம்எல்ஏ எல்.வெங்கடேசன் நேற்று மாலை விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் 3 லட்சத்து 10 ஆயிரத்து 200 ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்.

இன்று (ஏப்.8) கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் இதுபோன்ற நிதியை அளிக்க உள்ளதாக எல்.வெங்கடேசன் தெரிவித்தார். அப்போது மாவட்டப் பொருளாளர் தயாநிதி, துணைச் செயலாளர் சூடாமணி, நகர செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குரோனாவிடம் ரூ.2 லட்சத்திற்கான வரைவோலையை வழங்க உள்ளதாக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in