

முக்கியமான ரயில் நிலையங்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீல்சேர் வசதி பெற இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (ஐஆர்சிடிசி) இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரயில் போக்குவரத்து மற்ற போக்குவரத்தை காட்டிலும் ஒரளவுக்கு குறைந்த கட்டணத் திலும், எளிமையாகவும், வசதி யாகவும் இருப்பதால் வெளியூர் செல்லும் பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தை விரும்புகின்றனர். குறிப்பாக முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள ரயில்வசதி சிறப்பாக இருகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், செல்போன் மூலம் பல்வேறு வசதிகளை பெற ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அடுத்தகட்டமாக ரயில் நிலையங் களில் வீல்சேர் வசதியை பெற ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன் பதிவு வசதியை கொண்டு வரவுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசியின் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பொதுமக்களிடம் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கொண்டு ரயில்பயணிகளுக்கு எளிமையாக வசதி பெறும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி வருகிறோம். அந்த வகையில், ரயில் டிக்கெட் முன்பதிவின் போது வீல்சேர் வசதி பெறுவோர் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, முக்கியமான ரயில் நிலையங்களில் இது சோதனை முறையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன் தினம் புதுடெல்லி ரயில் நிலை யத்தில் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அடுத்த 2 மாதங்களில் பெரும் பாலான ரயில் நிலை யங்களில் இந்த வசதி விரிவுப்படுத்தப்படும். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், பெண்கள், நோயால் அவதிப்படுவோர் பயன்பெற முடியும்.