

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப் படவில்லை.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில் சென்னை, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தாக திருநெல்வேலி மாவட் டம் 4-வது இடத்தில் இருக்கிறது.
இம்மாவட்டத்தில் மட்டும் 36 பேருக்கு நோய்த் தொற்று உறுதி ஆகியிருக்கிறது.
இவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல தென்காசி மாவட் டத்திலிருந்து 2 பேர், தூத் துக்குடி மாவட்டத்திலிருந்து 4 பேரும் இங்கு சிகிச்சை பெறுகி றார்கள்.
கடந்த 2 நாட்களாக இம் மருத்துவமனையில் நோய்த் தொற்று அறிகுறிகளு டன் யாரும் புதிதாகப் பரிசோதனைக்கு வர வில்லை. புதிதாக நோய்த் தொற்று அறிகுறிகளுடன் யாரும் வராதது நெல்லை மாவட்ட மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை அளித்திருக்கிறது.
ஊரடங்கை மீறி, தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.