

டெல்லி மாநாட்டுக்குச் சென்று கிருஷ்ணகிரி திரும்பியவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 634 பேர், அவரவர் வீடுகளில் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 244 பேர் 28 நாட்களைக் கடந்துள்ளனர். இவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. மீதமுள்ள 314 பேர் வீட்டில் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 30 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்றனர். இவர்களில் ஒருவர் மட்டும் டெல்லியிலும், ஒருவர் பெங்களூருவிலும் உள்ளனர். 28 பேர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமையில் வைத்து கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு யாருக் கும் இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், இந்நோய் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் வராமல் இருக்க பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும், அவசியமின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.