

சேலம், ஈரோட்டில் கரோனா தொற்று பரப்பியதாக இந் தோனேசியா, தாய்லாந்து நாட்டினர் 17 பேர் உள்ளிட்ட24 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 11-ம் தேதி இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் சேலம் வந்தனர். அவர் களுடன் சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரும் வந்திருந்தார். இவர்கள் கிச்சிப் பாளையம், எருமாபாளையம், பொன்னம்மாபேட்டை செவ் வாய்பேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளில் மதபிரசங்கத்தில் ஈடுபட்டனர். மேலும், இவர் கள் அனைவரும் சேலம் கிச்சிப்பாளையம், ஜெய்நகர் பகுதியில் உள்ள மசூதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், இந்தோனேசி யாவைச் சேர்ந்த 11 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேர் என 16 பேர் கரோனா தொற்று பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.
அதில், இந்தோனேசியர்கள் 5 பேருக்கும், சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து,இவர்கள் அனை வரும் சேலம் அரசு மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப் பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, 11 இந்தோ னேசியர்கள் உள்ளிட்ட 18 பேர் மீது சேலம் கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘இந்தோனேசி யாவைச் சேர்ந்தவர்கள் பாஸ் போர்ட் விதிமுறைகளை மீறி இந்தியாவில் மத பிரசங்கம் செய்தது, இங்குள்ள மக்க ளுக்கு கரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது, மத பிரசங்கத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து மசூதி நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 9 பிரிவுகளில் 18 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது” என்றனர்.
ஈரோட்டில் 6 பேர் மீது வழக்கு
ஈரோட்டில் மத பிரச்சாரம் செய்ய வந்த தாய்லாந்து நாட்டினர் 7 பேரில், சிறுநீரக பாதிப்பு காரணமாக ஒருவர் கோவையில் உயிரிழந்தார்.
மற்ற 6 பேரில், மூவ ருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் கள் சிகிச்சை பெற்று வருகின் றனர். மீதமுள்ள மூவரும் மருத்துவமனையில் கண் காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு நகரப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு காரண மாக இருந்தது, சுற்றுலா விசா விதியை மீறி மத பிரச்சாரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது ஈரோடு வட்டாட்சியர் சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், 4 பிரிவுகளின் கீழ் தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.