3 ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

3 ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
Updated on
1 min read

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) சேரு வதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (புதன்கிழமை) முதல் வழங்கப்படும் என்று சட்ட பல் கலைக் கழகம் அறிவித் துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

3 ஆண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் வயது வரம்பு நிர்ணயித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேர வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 35 ஆகவும், மற்றவர்களுக்கு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சட்டப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி (ஆனர்ஸ்) படிப்புக்கு வயது வரம்பு எஸ்சி எஸ்டி வகுப்பினருக்கு 27 ஆகும். மற்றவர்களுக்கு 25.

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேரவும், சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு எல்எல்பி (ஆனர்ஸ்) படிப்பில் சேரவும் புதன்கிழமை (இன்று) முதல் 21-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளி லும் சட்டப் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in