Last Updated : 07 Apr, 2020 07:12 AM

 

Published : 07 Apr 2020 07:12 AM
Last Updated : 07 Apr 2020 07:12 AM

மனிதத்துவமிக்கவர்கள் நாம் என நிரூபிக்க வேண்டும்; மக்களை மரியாதை குறைவாக நடத்தக்கூடாது- காவல் துறையினருக்கு டி.ஜி.பி. திரிபாதி அறிவுறுத்தல்

பொதுமக்கள், வியாபாரிகளை மரியாதைக்குறைவாக நடத் தக்கூடாது என காவல் துறையினருக்கு டி.ஜி.பி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐ.ஜி-க்களுக்கு அவர் அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித் துள்ளதாவது:

காவல் அதிகாரிகள், காவலர் கள் மற்றும் அலுவலர்கள் அனை வரும் கைகளைக் கழுவுவது மற்றும் முகக்கவசம் அணிவதை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். வயதான மற்றும் நோயுற்றவர்களுக்கு காவல் நிலையங்களில் கடினமான பணி களை ஒதுக்கக்கூடாது.

காவல் துறையில் பணிபுரி வோரின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டுக்குளேயே இருக்க வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். போலீஸார், பொதுமக்களிடம் பேசும்போது குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியில் நின்று பேச வேண்டும்.

தற்போதைய சூழலில் பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப் பதால் அவர்களிடம் காவல் துறையினர் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஓட்டுநர்கள், கடைக்காரர்கள், பலசரக்கு கடை ஊழியர்கள், காய்கறி விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வரு வதால், அவர்கள் அனைவரையும் மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும், மரியாதைக்குறைவாக நடத்தக்கூடாது. மீண்டும், மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரிந்து வருவதால் காவல் துறை பொதுமக்களிடம் மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத் தும்போது மாநிலத்தின் எங்கோ ஒரு மூலையில், ஒரு காவ லரால் இழைக்கப்படும் ஒரு சிறிய தவறு, தெருக்களில் கடும் பணி புரிந்துவரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

எனவே, நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில் எத்தகைய அதிகபட்ச தூண்டுதல்கள் வரும் போதிலும், உங்களின் கோப தாபங்களைத் தவிர்த்து, பொது இடங்களில் அமைதியாகவும், கண்ணி யத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

கூட்டம் மிகுந்த பகுதி களில் பொதுமக்களை வரன் முறைப்படுத்த, அதே பகுதி யைச் சேர்ந்த சுறுசுறுப்பான, ஆரோக்கியமான, சமூக நோக்கம் கொண்ட இளைஞர்களை ஈடு படுத்திக் கொள்ளலாம்.

தமிழக காவல் துறையினர் பயனுள்ள, திறமைமிக்க படை யினர் என்பதையும் தாண்டி, அதி உன்னதமான மனிதத்துவம் மிக்க படையினர் என்பதை நிரூபணம் செய்ய வேண்டும்.

இந்த அறிவுரைகளை தீவி ரமாக கடைபிடிப்பதன்மூலமே, நெருக் கடியான இக்காலகட்டத்தை வெற்றிகரமாக கடந்து செல்ல இயலும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

வயர்லெஸ் மைக்கில் தெரிவித்த அதிகாரிகள்

டி.ஜி.பி திரிபாதியின் அறிவுரைகளை திருச்சி மாநகர காவல் துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ, நேற்று வயர்லெஸ் மைக் மூலம் தெரியப்படுத்தினார். இதேபோல அனைத்து மண்டலங்களிலும் அந்தந்த ஐ.ஜி-க்கள், மாநகரங்களில் அந்தந்த காவல் ஆணையர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x