

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தில் வெளியூரில் இருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக கிராம மக்கள் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதில் கிராம மக்களும் தங்கள் பங்களிப்பை பல்வேறு வகையில் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தில் ஊரின் இருபுறமும் கிராம மக்கள் செக்போஸ்ட் அமைத்துள்ளனர்.
இதனை ஊர் இளைஞர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். வெளியூரில் இருந்து யாரும் ஊருக்குள் வர அனுமதி கிடையாது .
உள்ளூர் மக்கள் வெளியே சென்று விட்டு வந்தால், அவர்கள் கைகளை கழுவி சுத்தம் செய்துவிட்டு தான் உள்ளே நுழைய வேண்டும். அதற்காக செக்போஸ்ட் அருகே தண்ணீர், கிருமி நாசினி போன்றவற்றை ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.