

மதுரையில் கரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மதுரையில் கரோனா பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்தததால் அண்ணாநகர், மருதுபாண்டியர் தெரு, நெல்லை வீதியில் வசிப்பவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளியாட்கள் இப்பகுதிக்குள் நுழையாதவாறும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியை தெரு முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர் காவல் ஆணையர் ஆகியோர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மதுரை செஞ்சிலுவை சங்கச் செயலர் கேபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துகுமார், தன்னார்வலர்கள் முகாம்பிகை, விமல் ஆகியோர் வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுர குடிநீர் வழங்கினர். மேலும் முக கவசங்களையும் வழங்கினர்.
மேலும் பொதுமக்களிடம் தனிமையில் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், கரோனா வராமல் தடுப்பது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.