

தமிழகத்தில் மேலும் 8 இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளன, மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் மேற்கொள் ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் 11 அரசு மருத் துவமனைகள், 6 தனியார் மருத் துவமனைகள் என மொத்தம் 17 மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங் கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர் உட்பட 8 இடங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் இந்த ஆய்வகங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். விரைந்து அனுமதி அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு 1.20 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படுவதால் அதற்கு தட்டுப்பாடு இல்லை.
நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தால் மக்கள் அச்சப்படாமல், அரசு சார்பில் தெரிவிக்கப்படும் தகவல்களை முறையாக கடை பிடித்தால் போதும்.
சமூகத் தொற்று ஏற்படா மல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற் கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோ ருக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் தேவையான வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு அரசு தேவையான பாதுகாப்பு அளித்து வருகிறது என்றார்.
விழுப்புரத்தில் ஆய்வு
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 9 பேர் இங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரத்தில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவ மனை ஆகிய வற்றில் 250 படுக்கை களுடன் அனைத்து உயிர்காக்கும் மருத் துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
ஏற்கெனவே, விழுப்புரத்தில் மருத்துவ பரிசோதனைக் கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
பக்கத்து மாவட்டங்களில் இருந்து அனுப்பப்படும் பரிசோ தனைகளையும் இங்கேயே எடுத்து, அதன் முடிவுகளை சென்னைக்கு அனுப்பி வருகின்றனர் என்றார்.
ஆய்வின்போது ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்.பி. ஜெயக் குமார், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சண்முகக்கனி, அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் டாக்டர் குந்தவி தேவி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.