பிரதமர் மோடியின் வேண்டுகோள்: சென்னை மக்கள் கடைப்பிடிப்பு

படம்: ம.பிரபு
படம்: ம.பிரபு
Updated on
1 min read

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் விளக்குகள் ஏற்றிக் கடைப்பிடித்தனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 571 ஆக உள்ளது. மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கும் அமலில் உள்ளது.

இதனிடையே ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் மோடி பேசும் போது ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

அதன்படி, இன்று (ஏப்ரல் 5) இரவு 9 மணியளவில் சென்னையில் பொதுமக்கள் அனைவருமே வீட்டில் லைட்களை அணைத்துவிட்டு, விளக்குகளை ஏற்றினார். இதனால் சென்னையே இருளில் மூழ்கி விளக்குகளில் ஜொலித்தது, குடியிருப்புகளில் உள்ள பலரும் ஒற்றுமையாக இடைவெளி விட்டு நின்று விளக்குகளைக் கையில் பிடித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பல இடங்களில் பொதுமக்கள் வெடிகள் வெடித்துக் கொண்டாடினார்கள். இதன் சத்தங்களைக் கேட்க முடித்தது. பிரதமர் விடுத்த வேண்டுகோளில் வெடி வெடிப்பு இல்லையென்றால், உற்சாக மிகுதியால் இதனைச் செய்துள்ளனர். இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பல கிண்டல் பதிவுகளைக் காண முடிந்தது.

பலரும் 'டேய்.. இது தீபாவளி இல்லடா' என்று கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். பல்வேறு திரையுலக பிரபலங்களும் வெடிகள் வெடித்துக் கொண்டாடியதற்கு தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in