

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ட்விட்டர் தளத்தில் தொடங்கிய #GiveUpChallenge சவாலுக்கு, இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் சமுதாய தனிமைப்படுத்துதலுக்காக வீட்டிற்குள்ளே இருந்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அன்று இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை உண்டாக்கியது.
இதனால் இன்று (ஏப்ரல் 5) இறைச்சி கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனிடையே, திருப்பூர் மாவட்ட ஆட்சியரான விஜய கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஏப்ரல் 4) இரவு வெளியிட்ட பதிவில், "அன்புள்ள திருப்பூர், நாளை மிக மிக முக்கியமான நாள். இறைச்சி கடைகளில் தயவுசெய்து கூட்டம் சேருவதைத் தவிருங்கள்.
எனவே பல அதிகாரிகள் நாளை பணியில் இருப்பார்கள் நீங்கள் கொஞ்சம் உதவி செய்யுங்கள். நம் எல்லாருக்காகவும். நாளை காலை வீதிகளில் உங்கள் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருப்பேன்” என்று பதிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, #GiveupChallenge என்ற பெயரில் சவால் விடுக்கும் ஒரு பதிவை வெளியிட்டார். அதன்படி, "நாளை யாரெல்லாம் மார்க்கெட்டில் கூட்டம் கூடாமல் வீட்டில் இருக்கிறீர்களோ, நாளை யாரெல்லாம், பிரச்சினையைச் சரிசெய்ய எங்களுக்கு உதவும் பொருட்டு உங்களின் விருப்பமான உணவை விட்டுக் கொடுக்கிறீர்களோ, உங்களின் சுயகட்டுப்பாடு, சுய தியாகம் குறித்துப் பதிவிட்டு அதை எனக்குப் பகிருங்கள்.. நீங்கள் தயாரா?" என்று தெரிவித்தார்.
இதற்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. பலரும் அவர்களுடைய வீட்டில் இருப்பதை வைத்துச் சமைத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் சவாலை ஏற்றுக் கொண்டு வந்த சில ட்வீட்கள்:
- MOHAN (@iammohu) April 5, 2020
- Wasim Feroze (@Ferozeshaja) April 5, 2020
- Umang Agarwal (@Umang_A) April 5, 2020
- Gopala Krishnan (@gopalishereforu) April 5, 2020