Published : 18 Aug 2015 03:23 PM
Last Updated : 18 Aug 2015 03:23 PM

பிளஸ் 2-வில் மாவட்ட அளவில் 2-ம் இடம்: கடன் தர அலைக்கழிப்பதாக ஆட்சியரிடம் மாணவி புகார்

பிளஸ் 2 தேர்வில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி கல்விக் கடனுக்கு வங்கிகள் அலைக்கழிப்பதால் மேற்படிப்பை தொடர முடியாமல் அவதிப்படுவதாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அடுத்த ஜாலிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகள் தீபிகா. இவர் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 1145 மதிப்பெண்கள் பெற்று தருமபுரி அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றார்.

அவர் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘எனக்கு அரசு ஒதுக்கீட்டில் திருச்சியில் உள்ள வேளாண்மை கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்துள்ளது. கல்விக் கடனுக்காக எங்கள் பகுதி வங்கிகளை அணுகியபோது அலைக்கழிப்பு தான் மிஞ்சியது. என் தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளிகள் என்பதால் கல்லூரி சேர்க்கைக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வங்கிக் கடன் கிடைக்க ஆவண செய்து எனது மேற்படிப்பை தொடர மாவட்ட நிர்வாகம் எனக்கு உதவ வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x