

ஊரடங்கு காலத்தில் முன்னைவிட வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் நமது வேலூர் முகவர்ஜெ.கணேசன். அவர் தனதுநாளிதழ் விநியோக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"17 வயசுல இந்தத் தொழிலுக்கு வந்தேன். இப்ப 70 வயசு.53 வருஷமா பத்திரிகை அலுவலகங்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே பாலமா இருந்திருக்கிறேன் என்ற பெருமிதம்எனக்குண்டு. ஆனால், இப்பத்தான் நிறைய பேர் எங்களோட பணியை ஒரு சேவையா அங்கீகரித்திருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு வந்ததும், காவல்துறை கெடுபிடி காரணமாக பல வீடுகளுக்குப் பேப்பர் போட முடியாமல் போய்விட்டது.
வழக்கமாக, பேப்பர் வரவில்லை என்றால், மறுநாள் சொல்வார்கள், அல்லது மாத சந்தா வசூல் செய்யும்போது சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் தாமதமானால்கூட, 'என்ன சார் பேப்பர் இன்னும் வரலை?' என்று திரும்பத் திரும்ப போன் போடுகிறார்கள்.
மக்களின் மனநிலை
‘என்ன அண்ணா... நாங்க வழக்கமா வேலைக்குப் போற பரபரப்புல சரியாக்கூட பேப்பர் படிக்க மாட்டோம், அப்பெல்லாம் சரியா போட்டீங்க. இப்ப இப்படி லேட் பண்றீங்களே'ன்னு வருத்தமாகப் பேசுகிறார்கள்.
‘தமிழ் பத்திரிகையிலேயே இந்து தமிழ் திசை தலையங்கம் மாதிரி, சமூகஅக்கறையோட எந்தப் பத்திரிகையிலும் வர்றதில்ல சார். அதுவும் இந்த கரோனா காலத்துல மக்களோட மனநிலையை கண்ணாடிபோல பிரதிபலிக்குது தலையங்கம்'னு பாராட்டுறாங்க.
பொதுவா, இந்து பத்திரிகையில பீதி உண்டாக்குற செய்திகளைப் போடாமல், பொறுப்புணர்வோடு, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை வெளியிடுவதாக வாசகர்கள் சொல்கிறார்கள். எல்லோரும் கரோனா அச்சத்தில் இருக்கும்போது, இந்து நாளிதழ் எப்படி குறைந்த பட்ச மனித கையாளுதலுடன், பாதுகாப்பான முறையில் இயந்திரங்களால் மடிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப் பட்டு வாசகர்களுக்கு விநியோகிக்கப் படுகிறது என்று நாம் வெளியிட்ட விளம்பரத்துக்கும் நல்ல வர வேற்பு. உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கு சார்" என் கிறார் கணேசன்.