சிவகங்கையில் செங்கல் சூளைகளில் தவித்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்: 2000 குடும்பங்களுக்கு அரிசி வழங்கினார் தொழிலதிபர்

மானாமதுரை அருகே கிளங்காட்டூரில் வடமாநில செங்கல் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்களை தன்னார்வலர் துபாய்காந்தி வழங்கினார்.
மானாமதுரை அருகே கிளங்காட்டூரில் வடமாநில செங்கல் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்களை தன்னார்வலர் துபாய்காந்தி வழங்கினார்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உணவின்றி தவித்த வடமாநில செங்கல் தொழிலாளர் குடும்பங்களுக்கு தன்னார்வலர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். மேலும் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தொழிலதிபர் ஒருவர் அரிசி வழங்கியுள்ளார்.

மானாமதுரை பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளனர். இங்கு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கால் தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். வேலை செல்லாததால் வடமாநிலத் தொழிலாளர்கள் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் கிளாங்காட்டூரில் உணவின்றி தவித்த மேற்கு வங்க மாநிலத்சை் சேர்ந்த 50 செங்கல் தொழிலாளர்களுக்கு தன்னார்வலர் துபாய் காந்தி காய்கறிகள், அரிசி, மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கினார்.

மேலும் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி உள்ளார்.

அதேபோல் சிவகங்கை அருகே மிக்கேல்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3 கிராமங்களில் உணவின்றி தவித்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தர்ராஜன் தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

தொழிலாளர்கள், கிராமமக்களுக்கு உதவிகரம் நீட்டிய இருவரையும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in