கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை: மும்மதத் தலைவர்களுடன் குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆலோசனை

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை: மும்மதத் தலைவர்களுடன் குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆலோசனை
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மும்மத தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி ஆலோசனை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் 5 பேர் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட தொற்றுநோய் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஊரடங்கு, மற்றும் 144 தடை உத்தரவை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறியதாக 1782 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் நோய் தொற்று ஏற்படாத வகையில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலம் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பில் தீவிரமாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதைப்போல் மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மும்மத தலைவர்களையும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி ஆலோசனை மேற்கொள்ளும் நிகழ்ச்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள நகர, கிராம பகுதிகளில் உள்ள மும்மத தலைவர்களிடம் இந்த காணொளி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடப்பட்டது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மும்மத தலைவர்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.

மேலும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.

அப்போது மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்ப நடவடிக்கைக்காக மேற்கொண்டு வரும் அனைத்து மக்கள் நல நடவடிக்கைக்கு மும்மத தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in