கோவில்பட்டியில் மேலப்பாளையம் தம்பதி தஞ்சம்: பொதுமக்கள் புகார்

கோவில்பட்டி அரசு மருத்துவமனை | கோப்புப் படம்
கோவில்பட்டி அரசு மருத்துவமனை | கோப்புப் படம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி கோவில்பட்டியில் தஞ்சமடைந்ததையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவில்பட்டி தெப்பக்குளத் தெருவில் மேலப்பாளையத்தையடுத்த குலவணிகர்புரத்தைச் சேர்ந்த 54 வயது நபரும், அவரது மனைவியும் நேற்று காலை மகன் வீட்டில் தஞ்சமடைந்தனர்.

இந்தத் தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் நேற்று இரவு வருவாய்த் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லாததையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே மேலப்பாளையம் பகுதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து இருவர் கோவில்பட்டிக்கு வந்து தஞ்சமடைந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in