மதத்தை வைத்து பிரச்சினை உருவாக்க வேண்டாம்: சத்குரு

மதத்தை வைத்து பிரச்சினை உருவாக்க வேண்டாம்: சத்குரு
Updated on
1 min read

கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜாதி, மதம் மற்றும் இனத்தின் பெயரில் பிரிவினையை உருவாக்கக் கூடாது. குறிப்பிட்ட மதத்தினரால்தான் நோய்த் தொற்று பரவுகிறது என்று தவறான தகவலை பரப்பக்கூடாது.

உலகமே ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கும்போது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதைவிடுத்து, மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்சினையை உருவாக்கக் கூடாது. அனைவரும் பொறுப்புணர்வோடும், விழிப்புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in