போரூரில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்

போரூரில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மேம்பாலப் பணிகளை விரைவு படுத்தக்கோரி சென்னை போரூர் சந்திப்பில் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

‘‘போரூர் நான்கு சாலை சந்திப்பில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி களை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும், தனியாருக்குச் சொந் தமான 17 ஏக்கர் நிலத்தை எடுத்து, போரூர் ஏரியை விரிவுபடுத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு வதாக ஜெ.அன்பழகன் தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in