

நியாயவிலைக் கடைகளில் இலவசப் பொருட்களை ஏப்ரல் இறுதிவரை பெற்றுக் கொள்ளலாம், ரூ.1000 நிவாரணத் தொகை வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உடைகளை முதல் வர் பழனிசாமி நேற்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
ரேஷன் கடைகளில் நிவாரணம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப் பட்டு வரும் சூழலில், அண்டை மாநிலங்களில் தங்கியிருக்கும் தமிழக மக்களுக்கும் கிடைக்குமா?
தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சென்று தங்கி பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில முதல்வர்கள், அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நம் அதிகாரிகள் பேசி வருகிறார்கள். அங்கு தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் தற்போது 309 பேர் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ள சூழலில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாகக் கருதமுடியுமா?
அப்படியில்லை. பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள் விகிதாச்சார அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதுபோன்ற நடவடிக்கை உண்டா?
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் இயங்க வில்லை. இதனால் அரசுக்கு வரும் ஜிஎஸ்டி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் தற்போது பிடித் தம் செய்யப்பட மாட்டாது.
மளிகைப் பொருட்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா?
வியாபாரிகள் சங்க தலைவர் களுடன் தொடர்பு கொண்டு பேசிய அரசு உயர் அதிகாரிகள், யாராவது அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தோம். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக அவர் களும் தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட வாய்ப் புள்ளதா?
மத்திய அரசு ஏப்ரல் 14 வரை தடை உத்தரவு அறிவித்துள்ளதால், பொறுத்திருந்து பார்ப்போம்.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ரூ.1000 நிவார ணம், வெளிமாநிலம், மாவட்டங் களில் தற்போது தங்கியுள்ளவர் களுக்கும் கிடைக்குமா?
யாராவது வெளியூர் சென்றி ருந்தாலோ, வாங்காமல் இருந் தாலோ, இந்த மாத இறுதிக்குள் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமின்றி, அதிக அளவில் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் கூடுவதாக வந்த தகவல்கள் அடிப் படையில், ரூ.1000 நிவாரணத்தை வீடுகளுக்கே சென்று கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி யுள்ளோம்.
பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்கள், கரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? எப்படி தடுக்க வேண்டும்? அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? மக்கள் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்ற செய்திகளை அன்றாடம் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் வாயிலாக தெரிவித்துக் கொண்டி ருக்கின்றனர். பதிவு செய்யப்பட்ட, அரசு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை யாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங் கப்படும்.
இவ்வாறு முதல்வர் பதில் அளித்தார்.