Published : 04 Apr 2020 07:03 AM
Last Updated : 04 Apr 2020 07:03 AM

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்வு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமி ழகத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியிடங்களில் சுற்றுபவர்களை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லை களும் மூடப்பட்டுள்ளன. போலீஸாரும் தடுப்பு வேலிகள் அமைத்து கண் காணித்து வருகின்றனர்.தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தேவையின்றி வெளியே இயக்கப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படு கின்றன. ட்ரோன் மூலமும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்ததாக தமிழகம் முழுவதும் 49,303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 54,817 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுபோக 40,903 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து 444 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்தார்.

வாகனங்கள் வழங்கப்படாது

காவல் துறை அதிகாரிகள் கூறிய போது, ‘‘பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த எல்லைக்கு உட் பட்ட காவல் நிலையங்களில் வைக்கப் பட்டுள்ளன. எந்த வாகனமும் இப்போதைக்கு வழங்கப்படாது. நீதிமன்றம் மூலம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப் படும். தடை உத்தரவை மீறியதாகவழக்கு பதிவு செய்யப்படுவது, வேலைக்கு சேரும்போதும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் இளைஞர்கள், மாணவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x