விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,474 பேர் கைது

ஒரு நாய்குட்டி மற்றும் 4 பேர் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.
ஒரு நாய்குட்டி மற்றும் 4 பேர் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்வதோடு அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த 8 நாட்களில் 1,308 பேர் கைது செய்யப்பட்டு 1,078 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவின் 9-வது நாளான நேற்று விழுப்புரம் உட்கோட்டத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 29 பேரையும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 20 பேரையும், செஞ்சி உட்கோட்டத்தில் 18 பேரையும், கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 9 பேரையும் ஆக மொத்தம் 76 பேரை போலீஸார் கைது செய்து ஒரு கார் மற்றும் 64 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இன்றோடு (ஏப்.3) 10 நாட்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,474 பேர் கைது செய்யப்பட்டு 1,169 பைக்குகள், 8 ஆட்டோ, 14 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று ஒரே இருசக்கர வாகனத்தில் 3 இளம்பெண்கள், ஒரு நாய் குட்டியுடன் பயணித்தவர்களை கண்டு திகைத்த போலீஸார் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in