தருமபுரி மாவட்டத்தில் உணவின்றித் தவித்த நாடோடி தொழிலாளர்கள் மீட்பு

நாடோடி தொழிலாளர்கள் மீட்பு
நாடோடி தொழிலாளர்கள் மீட்பு
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மகேந்திரமங்கலத்தில் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மகேந்திரமங்கலம் ஊராட்சிப் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த நாடோடி இன மக்கள் 13 பேர் பூம்பூம் மாடு வளர்த்தல், ஜோதிடம் பார்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அவர்கள் மகேந்திரமங்கலத்திலேயே தங்கி பிழைப்புக்கு வழியின்றியும், உணவுக்கும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று (ஏப்.3) தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி விசாரணை நடத்தினார். பின்னர், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

மேலும், அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் வாகன வசதியை ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பணியின்போது, வட்டாட்சியர்கள் ராஜா, வினோதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in