சேலம் மாநகரில் இறைச்சி கடைகள் சனி, ஞாயிறுகளில் செயல்பட தடை: மாற்று இடம் ஒதுக்கி மாநகராட்சி நடவடிக்கை

சேலம் மாநகரப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகள் சனி, ஞாயிற்றுகிழமைகளில் செயல்பட வசதியாக, சேலம் அரபிக் கல்லூரி அருகே மாற்று இடம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகரப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகள் சனி, ஞாயிற்றுகிழமைகளில் செயல்பட வசதியாக, சேலம் அரபிக் கல்லூரி அருகே மாற்று இடம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி எல்லைக்குள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகள், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநகர எல்லைக்குள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

மாறாக, இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஓமலூர் பிரதான சாலையில் அரபிக் கல்லூரி அருகில் விசாலமான மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் அருகில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வாகனங் களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in