கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தமிழக எல்லையில் கிருமிநாசினி தெளிப்பு- கரோனா, பறவைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை

ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், கர்நாடகாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓசூர் மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள்.
ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், கர்நாடகாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓசூர் மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள்.
Updated on
1 min read

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு, தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகம், கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், காய்கறிகள், காஸ் ஆகியவற்றை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்குள் நுழையும் சரக்கு வாகனங்கள் மூலம் கரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் ஆகியவை தமிழகத்துக்குள் பரவிவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடி சோதனைச்சாவடியைக் கடக்கும் அனைத்து சரக்குவாகனங்கள் மீதும், ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் 3 குழுக்களாகப் பிரிந்து கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும், வாகன ஓட்டுநர்களின் உடல் வெப்ப அளவை அளவிடும் பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in