Published : 03 Apr 2020 07:32 AM
Last Updated : 03 Apr 2020 07:32 AM

மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் மட்டுமே பயண அனுமதி கடிதம் வழங்கலாம்: தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவு

திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கான பயண அனுமதிக்கடிதம் வழங்கும் அதிகாரத்தை சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டுமே வழங்கி தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத் தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே முடிவு செய்த திருமணம், திடீர் மரணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்ககாக பயணம் மேற்கொள்பவர்கள் சென்னை மாநகராட்சியில் மண்டல அதிகாரிகள், துணை ஆணையர்களிடமும், மாவட்டங்களில் வட்டாட்சியர்களிடமும் அனுமதி கடிதம் பெறலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த அதிகாரம் நீக்கப்பட

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில், ‘‘அனுமதி கடிதம் வழங்கும் அதிகாரம் துணை ஆணையர்கள் மற்றும் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பணியில் திருப்தியில்லை. தினசரி அதிக அளவிலான பொதுமக்கள் சாலையில் நின்று கொண்டிருக்கின்றனர். எனவே, முதல்வர் உத்தரவின்படி அந்த அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கே வழங்கப்படுகிறது. மேற்படி காரணங்களுக்காக வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து அவர்களே அனுமதி வழங்குவார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x