இலவச பொருட்களை விட்டு கொடுத்தல்: குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு விளக்கம்

இலவச பொருட்களை விட்டு கொடுத்தல்: குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு விளக்கம்
Updated on
1 min read

இணையதளம் மற்றும் செயலி மூலம் ரூ.1,000 நிவாரணம் மற்றும் இலவச பொருட்களை விட்டுக் கொடுப்பது ஏப்ரல் மாதத்துக்கு மட்டுமே பொருந்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஏப்ரல் 2-ம் தேதி நேற்று முதல் கரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை ரூ.1000 மற்றும் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிவாரண உதவித்தொகை மற்றும் இலவச பொருட்கள் தற்போது பெற விருப்பமில்லாதவர்கள் இதற் கான ‘tnpds.gov.in’ என்ற இணைய தள முகவரி மற்றும் tnepds செயலியிலும் சென்று உதவித் தொகை அல்லது பொருட்கள் மட்டும் அல்லது இரண்டும் இந்த மாதம் மட்டும் விட்டுக் கொடுக்கும் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். இவ்வாறு விட்டுக் கொடுப்பது ஏப்ரல் மாதத்துக்கு மட்டுமே பொருந்தும். விட்டுக் கொடுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in