

ஊரடங்கை முன்னிட்டு காய்கனிகளை மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் வாங்கி வருகின்றனர். தற்போது குறைவான அளவே காய்கனிகள் வருவதால் விலை அதிகரித்துள்ளது.
தேவையையும், தட்டுப்பாட்டையும் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு நாகர்கோவில், மற்றும் குமரியின் பல இடங்களில் காய்கனிகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வடசேரி பேரூந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கனி கடைகளில் மாநகராட்சியினர் தினமும்
விலைப்பட்டியல் வழங்கி வருகின்றனர்.
அத்துடன் நேற்றில் இருந்து காய்கறி வாங்க மக்கள் கூடும் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் நின்று மைக்கில் காய்கறிகளின் விலைகளை அறிவித்தனர்.
இதனால் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறு காய்கறி வாங்க வருவோரிடம் மாநகராட்சி ஊழியர்கள் வலியுறுத்தினர்.