விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.100-க்கு காய்கறித் தொகுப்பு

வேளாண்மைத் துறை சார்பில் ரூ.100-க்கு காய்கறித் தொகுப்பை வேளாண்மை இணை இயக்குநர் கென்னடி ஜெபகுமார் தொடங்கி வைத்தார்.
வேளாண்மைத் துறை சார்பில் ரூ.100-க்கு காய்கறித் தொகுப்பை வேளாண்மை இணை இயக்குநர் கென்னடி ஜெபகுமார் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 வட்டாரங்களில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவின் சார்பில் ரூ.100-க்கு காய்கறித் தொகுப்பு விற்பனை தொடங்கியுள்ளது.

விழுப்புரத்தில் இன்று (ஏப்.2) காய்கறித் தொகுப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த வேளாண்மை இணை இயக்குநர் கென்னடி ஜெபகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போதுள்ள சூழலில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களில் வீதிதோறும் நாள்தோறும் இக்காய்கறித் தொகுப்பு விற்பனை செய்யப்படும்.

இத்தொகுப்பில் வெங்காயம், தக்காளி தலா 500 கிராம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி அல்லது முருங்கைக்காய் தலா 250 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், வாழைக்காய் 2, கீரை 1 கட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவை அடங்கும்.

நாள்தோறும் காலை 8 மணிக்குத் தொடங்கும் இந்த விற்பனையை வட்டார வேளாண்மை அலுவலர்கள் கண்காணிப்பார்கள்" என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது வேளாண்மைத் துணை இயக்குநர் செல்வபாண்டியன், உதவி இயக்குநர் சரவணன், திருக்குணம் உழவர் உற்பத்தியாளர் குழுத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in