களப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செவிலியர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் அதிமுகவினர்

காவலர்கள் மற்றும் செவிலியருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் அதிமுக நிர்வாகிகளான வெற்றிவேல் மற்றும் கோவிந்தராஜ்.
காவலர்கள் மற்றும் செவிலியருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் அதிமுக நிர்வாகிகளான வெற்றிவேல் மற்றும் கோவிந்தராஜ்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் களப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செலிவியர்கள், தன்னார்வ அமைப்பினருக்கு அதிமுகவினர் கபசுரக் குடிநீரை வழங்கினர்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் எந்த விதத்திலும் பரவும் என்ற அச்சம் இருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து வெளிப்புறங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிகரிக்கும் வகையில் அதிமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

நெய்வேலி நகர அதிமுக தலைவர் க.வெற்றிவேல் மற்றும் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்து கடந்த இரு தினங்களாக கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினர்.

செவிலியருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் அதிமுக நிர்வாகிகள்
செவிலியருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் அதிமுக நிர்வாகிகள்

இது தொடர்பாக வெற்றிவேல் கூறுகையில், "தன்னலமில்லாமல் பணியாற்றும் அவர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது குடும்பத்தினரைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையில், நோய்த் தாக்குதலில் இருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் அசாதாரணமான சூழலில் பணியாற்றும் அவர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப்பொடி வாங்கி, அதை சித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி தயார் செய்து விநியோகித்தோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in