

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் இன்று தூய்மை பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உடன் இருந்தார்.
முன்னதாக அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையைப் பார்வையிட்டு தலைமை மருத்துவர் பொன்ரவியிடம் மருத்துவத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கெனவே ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மேலும் 50 லட்ச ரூபாயை கரோனா தடுப்புப் பணிகளுக்காக கனிமொழி ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.