

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரத்தில் (டானா பகுதி) 27GC012PN எண் கொண்ட நியாவிலைக் கடையில் சமூக விலகலைக் கடைபிடிக்க மூன்றடிக்கு ஒரு சேர் போடப்பட்டிருந்தது முன்மாதிரியாக அமைந்தது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 43 ஆயிரத்து 451 கார்டுகளுக்கும், தமிழக அரசு அறிவித்துள்ள 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் பணி தொடங்கியது.
இன்றிலிருந்து ஒவ்வொரு நியாய கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற சமையல் உதவிப் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வழங்கும் பணி மாவட்டத்திலுள்ள 789 நியாய விலைக் கடைகள் மூலம் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரத்தில் (டானா பகுதி) 27GC012PN எண் கொண்ட நியாவிலைக் கடையில் சமூக விலகலைக் கடைபிடிக்க மூன்றடிக்கு ஒரு சேர் போடப்பட்டிருந்தது.
சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக ரேஷன் வாங்க வரும் பொதுமக்களுக்கு மூன்றடிக்கு ஒரு சேர் என்ற முறையில் வருகைதரும் அனைவரையும் வரிசையில் அமரவைத்து உதவிதொகை வழங்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 697 நியாய விலைக்கடைகளிலும், தென்காசி மாவட்டத்தில் 507 நியாய விலைக் கடைகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லையில் உள்ள 3,88,525 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் குடும்ப அட்டைக்குத் தகுதியான அளவு ஏப்ரல் 2020 மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்.
மேலும் மார்ச் 2020 மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்கத் தவறியிருந்தால் அதையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். அனைத்து நியாய விலைக்கடை விற்பனையார்களுக்கும் முகக்கவசம் கையுரை கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது.
மேலப்பாளையம் பகுதி கரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா வைரஸ் நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நேரில் வழங்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.