

ஓயாது உழைத்துக் கொண் டிருக்கும் பத்திரிகை முகவர் களில் ஒருவரான வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜி.எஸ்.வெங்கடேஷ், பேப்பர் விநியோக பையன்கள்தான் நாளிதழ்களின் உயிர் மூச்சு என்கிறார். அவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
‘‘கரோனா நமக்கு வந்து விடுமோ என்பதை விடவும், எனக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது பையன்கள் இனி வேலைக்கு வருவார்களா என்பது தான். காரணம், வாசகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை யைக் காப்பாற்ற வேண்டுமே என்கிற பயம். பெரும்பாலான பையன்கள் கல்லூரி மாணவர்கள். அவர்களது பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால், அவர் களோ வழக்கம்போல எல்லோரை யும் வேலைக்கு அனுப்பிவைத் தார்கள். ‘‘எங்கள் மகன் அவனுடன் படிக்கிற மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுகையில் நல்ல ஆரோக்கி யத்தோடும், பலத்தோடும் இருப் பதற்குக் காரணம் அவர்கள் பேப் பர் விநியோகம் செய்வதுதான். தினமும் காலை 3.30 மணிக்கே எழுந்து குறைந்தது 20 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுகிறார்கள். உங்களுடனே இருக்கட்டும் தம்பி' என்று பெற்றோர் காரணம் சொன்னார்கள். நெகிழ்ந்துபோய் விட்டேன்.
இப்போதெல்லாம் நான் அந்த பையன்களுக்கு கூடுதல் மரி யாதை கொடுக்கிறேன். கையுறை, முகக்கவசத்தை முறையாக அணிந்திருக்கிறார்களா... அடிக் கடி கை கழுவுகிறார்களா? என்று அவர்களது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். ‘இதுவரையில் இல்லாத அள வுக்கு வாசகர்களும் எங்கள் மீது அதீத அன்பு காட்டுறாங்க அண்ணா' என்று பையன்களும் சொன்னார்கள். ‘அண்ணா.. ஜட்ஜ் வீட்டுக்குப் பேப்பர் போட் டேன்ல. அவர் எனக்கு சல்யூட் அடித்து குட்மார்னிங் சொன் னார்ணா' என்று ஒரு பையன் சொன்னான்.
நான் வழக்கமாக பேப்பர் போடும் வங்கியின் மேலாளர், ‘‘வெங்கடேஷ் நீங்க வாடகை வீட்லதான இருக்கீங்க... ஒரு புது வீடு வாங்குங்க நான் லோன் தர் றேன்' என்றார். இவ்வளவு இக் கட்டான சூழலிலும் நேரம் தவறாமல் பேப்பர் போடுவதால், பால் முகவர் உள்ளிட்ட வேறு சில வாய்ப்புகளும் என்னைத் தேடி வந்திருக்கின்றன. செய்யும் தொழிலே தெய்வம். அதுவே நமக்கான பலன்களைத் தரும் என்பதை இந்த இக்கட்டான கால கட்டம் உணர்த்தியிருக்கிறது.’’