Published : 02 Apr 2020 08:10 AM
Last Updated : 02 Apr 2020 08:10 AM

காற்றில் பறக்கும் சமூக விலகல் நடைமுறை: பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

ஊரடங்கு உத்தரவையும் மீறி வாகனங்கள் இயக்கப்பட்டதால் சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் காவல் துறையினர் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி பயணம் மேற்கொள்பவர்களை காவல் துறையினர் எச்சரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை பாடி மேம்பாலத்தில் நேற்று காலையில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான வாகனங்கள் வந்ததால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் ஒரே இடத்தில் கூடி நின்றதால், சமூகவிலகல் என்பதும் அங்கு இல்லை.

சாலையில் ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெருக்கடி 144 தடை உத்தரவு இருக்கிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தேவையற்ற பயணங்களை மேற்கொண்ட வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதேப்போல பல இடங்களில் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு இன்றி ஏராளமான பொதுமக்கள் வெளியே சுற்றுகின்றனர்.

இதைத்தொடர்ந்து சென்னையில் நேற்று 161 இடங்களில் போலீஸார் வாகன சோதனை நடத்தி, 302 வழக்குகள் பதிவு செய்து, 170 வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாக தனியாக 80 வழக்கு கள் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x