Published : 02 Apr 2020 07:48 AM
Last Updated : 02 Apr 2020 07:48 AM

ஈரோட்டில் 60,000 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு- கரோனா வைரஸ் தடுப்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக் கையாக ஈரோடு மாவட்டத் தில் 17,000 வீடுகள் தனிமைப் படுத்தப்பட்டு, அதில் வசிக்கும் 60,000 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற மாநாட் டில் பங்கேற்றுவிட்டு, ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டி னர் மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறி யப்பட்டது. அவர்கள் பெருந் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். அவர்கள் தங்கியி ருந்த சுல்தான்பேட்டை, கொல்லம் பாளையம் உள்ளிட்ட குடியிருப் புப் பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டன.

மேலும், தாய்லாந்து நாட்டினரு டன் பழகிய 117 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதன்பின்னர், கரோனா வைரஸ் தொற்று 20 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, அவர்களும் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர் கள் குறித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளதால், ஈரோட் டில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தனிமைப் படுத்தப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, வெளிநாடு சென்று திரும்பியவர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 17,000 வீடுகளைச் சேர்ந்த 60,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 225 ஊராட்சிகளுக்கும் நோய் தடுப்பு உபகரணங்கள் மற்றும் கிருமிநாசினிகளை ஆட்சியர் கதிரவன் நேற்று வழங்கினார்.

இந்நிலையில் அரசின் கரோனா நிவாரணத் தொகை, ரேஷன் பொருட்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6.82 லட்சம் அரிசி கார்டுகளுக்கு வழங்கப் படவுள்ளன.

இதனால், ரேஷன் கடை களில், சமூக இடைவெளி குறைந்து, கரோனோ தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர் வலர்கள் அச்சம் தெரிவித்துள்ள னர். மேலும், மாவட்டத்தில் கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதல் முக்கியத்துவம் அளித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாணை வெளியீடு

ஈரோடு சாலை போக்குவரத்துக் கழக மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப் பட்டதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இது குறித்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறும் போது, “ஐஆர்டி மருத்துவ மனையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யாக மாற்றுவதற்கான கொள்கை முடிவு ஓராண் டுக்கு முன்னர் எடுக்கப்பட் டாலும், அரசாணை வெளியிடப் படவில்லை. இதனால், மருத்துவ மனை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகளை மேற் கொள்ள முடியாமல் இருந்தது. தற்போது கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப் பட்டதால், கரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கேட்டுப் பெற முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x