Published : 02 Apr 2020 07:30 AM
Last Updated : 02 Apr 2020 07:30 AM

டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை- 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

செங்கை / காஞ்சி/ திருவள்ளூர்/வாலாஜா / திருவண்ணாமலை

டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவள்ளூர், காஞ்சி, செங்கை, ராணிப்பேட்டை, ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 90-க் கும் மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காஞ்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டைச் சேர்ந்த 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் 2 ஆயிரம் பேரில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதாக அதிர்ச்சி தகவல்வெளியானது.

இந்நிலையில் செங்கை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தம் 90 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் காஞ்சியில் உள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதேபோல் பெரும்புதூர் பகுதியிவ் ஒருவருக்கும் பாதிப்பு இருப்பது உறுதியானது.

மேலும், இவர்களுடன் பழகிய100 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே தொற்று உறுதி செய்யப்பட்டோர் இருந்த பகுதிகளில் வீடுதோறும் சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தினர்.

கடைக்கு ’சீல்’

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கா விட்டால், சம்பந்தப்பட்ட கடைக ளுக்கு 'சீல்' வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் அதிக விலையில் பொருட்களை விற்ற மளிகை கடைக்கு தாம்பரம் வட்டாட்சியர் ’சீல்’ வைத்தார். அதேபோல் பெரும்புதூரில் அதிக விலைக்கு காய்கறி விற்ற காய்கனி அங்காடிக்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ’சீல்’ வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் ரூ.100-க்கு 11 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து வரும் முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் விற்பனையகங்கள், ‘ திருவீர்’ என்ற பெயரில் திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய இடங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

கோயில்களில் யாகம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சிறப்பு கலசங்கள்அமைத்து தன்வந்திரி, அமிர்தமித்ரிந்தி உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன. இதேபோல், ஸ்தல சயனபெருமாள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன், மதுராந்தகம் கோதண்டராமர், கூவத்தூர் வாலிஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. மேலும் காஞ்சி அருகே கூழமந்தல் கிராமத்தில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் ராகு, கேது சாந்தி பூஜை நடைபெற்றன.

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், பாணாவரம், சோளிங்கர், மேல்விஷாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 பேர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் வாலாஜா அரசுமருத்துவமனையில் நேற்று முன்தினம்அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களதுரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில்..

டெல்லியில் இருந்து திரும்பிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 16 பேர்டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில்பங்கேற்றுள்ள விவரம் தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய பட்டியலின்படி அவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு செய்யாறில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x