

‘ரேஷன் கடைகளில் ஒரு நாளைக்கு 100 நபர்கள் வீதம் ‘கரோனா’ நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
துரை மாநகராட் கொரோனா நோய் தடுக்க தத்தனேரி பகுதியில் வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘கூட்டுறவுத் துறையின் சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் முழு பொறுப்பேற்று ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் காலை 9 மணி முதல் 12 மணி வரை 50 நபர்களுக்கும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை 50 நபர்களுக்கும் என பிரித்தும் இந்த கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
நியாய விலைக் கடைகளில் மதிய நேரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், கடைகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த காலநேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்கள் சீராக வழங்கப்படும். பொதுமக்கள் அச்சப்படவோ, கூட்டம் கூடவோ தேவையில்லை பொறுமையாக ஒவ்வொருவராக வாங்கலாம். ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு ‘கரோனா’ நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். மக்கள் பொறுமையாக வாங்கிக் கொள்ள ’’ என்றார்.